இடுகைகள்

ஜனவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நினைவினூடாய்,,,

அவரை தோழர் என அழைப்பதா, இல்லை கற்றுத் தந்த ஆசிரியர் என அழை ப்பதா, இல்லை குரு என மனதுக்குள் உருவகித்துக்கொள்வதா,,,? பழைய நாட்கள் அவை/ நினைத்துப்பார்க்கவும் அசை போடவுமாய் இனிக்கும் நினைவுகளை மனம் தடவி வைத்திருந்த பொழுதுகளின் ரசவாதங்கள் துள்ளலாய் நகர்வு கொண்ட நாட்கள், தொண்ணூறுகளின் முற்பகுதி என்கிறதாய் நினைவு/ வழக்கம் போல் பணி முடிந்த மாலை வேளையில் டீகடை ஒன்றில் நின்று கொண்டிருந்தேன், அப்பொழுது எனக்குள் இருந்த டீக்குடிக்கும் பழக்கத்தை நண்பர் ஒருவர் இவ்விதமாய் விவரிப்பதுண்டு, “என்ன இது ,டீக்குடிக்கும் முன்னாடி ஒரு டீக்குடிக்கிறீங்க, டீக் குடிக்கும் போது ஒரு டீக்குடிக்கிறீங்க, டீக்குடித்த பின்னாடி ஒரு டீக் குடிக்கிறீங்க,என்பார், அவரது பேச்சிறிக்கு பெரும்பாலுமாய் பதிலேதும் சொல்லாமல் நகர்கிற நாட் கள் ஒன்றில்தான் தோழர் மாரிக்கனி அவர்களுக்கும் எனக்குமான சந்திப்பு நிகழ்கிறது குறிப்பிட்ட இடமொன்றின் சூழ் கொண்ட சூழலில், அப்பொழுதெல்லாம் இன்று போல் செல் போன் கிடையாது, லேண்ட் லைன் போனே அலுவலகங்களில் மட்டுமே காணக் கிடைக்கிற பாக்கியம். அதுவும் உள்ளூர்க்காரர்களுக்கு மட்டும் பேசிக்கொள்ள

கடித்தலும் கடித்தல் நிமித்தமும்,,,

படம்
சுற்றிக்கொண்டிருந்த ஒற்றைக்கொசு கடிக்கும் என எதிர்பார்ப்பில்லை. ஆனாலும் கடிக்காது என்கிற உத்திரவாதமும் இல்லை. உத்திரவாதமற்ற கொசுக்கள் நாள் மீறி இடம் மீறி                                     ஆள் மீறி பறந்து கொண்டும் ரத்தம் உறிஞ்சி கொண்டுமாய்,,,/